கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



நூருள் ஹுதா உமர்.
கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு
 வாக்கெடுப்பில் 05 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (02) காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களினால் இவ்வரவு செலவு அறிக்கையை சபையில் சமர்ப்பித்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுயட்சை குழு (ஹெலிகப்டர்), சுயட்சை குழு (மான்), நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ,  
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். ராஜன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ. மனப், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சப்ரஸ் மன்சூர், தமிழர் விடுதலை கூட்டணி ,  சாய்ந்தமருது சுயாதீன அணி, போன்றவர்கள் எதிராக வாக்களித்தனர். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பிலான உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது சுயாதீன அணியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமுகமளிக்கவில்லை.  இருந்த போதிலும் ஆதரவாக 24 பேரும் எதிராக 15 பேரும்  வாக்களித்து மேலதிகமாக 09 வாக்குகளினால் இப்பாதீடு வெற்றிபெற்றது.
கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.