பாதாளக் குழு, போதைப் பொருள் விற்பனையில் பொலிஸார் - புதிய அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு - Madawala News Number 1 Tamil website from Srilanka

பாதாளக் குழு, போதைப் பொருள் விற்பனையில் பொலிஸார் - புதிய அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டுஇலங்கைப் பொலிஸாரில், பத்து சதவீதமானவர்கள் பாதாள
 உலகக் குழு மற்றும் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இவ்வாறான பொலிஸாரை, பொலிஸ் துறையிலிருந்து விரட்டியடிப்பது தனது பொறுப்பு என, புதிதாக பதவியேற்றுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அத்மிரால் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் இக்கலந்துரையாடலின்போது, மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, 
இலங்கையில் சுமார் எட்டாயிரம் பொலிஸார் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புகளை வைத்துள்ளனர். 


இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளை விரட்டியடித்து, அவர்களது உறவினர்கள் மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்குகள் என்பன சோதனை செய்யப்பட வேண்டும். 


அத்துடன், உயர் நிலை பொலிஸ் அதிகாரிகளை விட்டு, கீழ் நிலை பொலிஸ் அதிகாரிகளிடம் மாத்திரம் நடவடிக்கைகளை எடுப்பதால், இந்த நிலைமையை ஒருபோதும் மாற்றி அமைக்க முடியாது. 


எனவே, உயர் நிலை பொலிஸ் அதிகாரிகளிடமும் கடுமையான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

பாதாளக் குழு, போதைப் பொருள் விற்பனையில் பொலிஸார் - புதிய அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு பாதாளக் குழு, போதைப் பொருள் விற்பனையில் பொலிஸார் - புதிய அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5