திருடப்பட்ட வேன் மீட்கப்பட்ட சம்பவம் : உதவிய அனைவருக்கும் நன்றி சொல்கிறார் வேன் உரிமையாளர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

திருடப்பட்ட வேன் மீட்கப்பட்ட சம்பவம் : உதவிய அனைவருக்கும் நன்றி சொல்கிறார் வேன் உரிமையாளர்.(அன்சார் எம்.ஷியாம்)

அல்ஹம்துலில்லாஹ்;
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே .
கடந்த இரு நாட்களுக்கு முன்பு எனது முகப்புத்தமூடாகவும் மடவளை நியூஸ் ஊடாகவும் பதிவிடப்பட்ட,

*மோசடியாக வேன் (57- 4386) ஒன்றை களவாடிச் சென்ற விடயத்தை* இந்த நிமிடம் வரை 3600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் மாத்திரமின்றி, மிகக் கூடுதலான ஊடகங்களும் பகிர்ந்து உதவியதால்,

களவாடிச் சென்றவனை அடையாளம் கண்டதோடு மாத்திரமல்லாமல்,
குறித்த வேனையும் நேற்று  (20/11) பிற்பகல் கண்டுபிடித்தோம்.

#அல்ஹம்துலில்லாஹ் 

மேற்படி வேனானது திருகோணமலையில் வைத்தே மோசடியாக கைமாறப்பட்டதால்,
திருகோணமலை பொலிஸ் நிலையத்திலேயேதான் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலைமையிருந்ததால், வேனை களவு கொடுத்த உறவுகளுக்கு அது தொடர்பான எந்த விளக்கமும் தெரியாமலிருந்த நிலையில்,
எமது கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்  கௌரவ சுபைர் ஹாஜி அவர்களிடம் விடயம் தெரிவிக்கப்பட்டதும்,
எதுவித மறுப்பும் தெரிவிக்காது உடனடியாக இதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கினார்.

திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் இவர்களை அழைத்துக்கொண்டு முதற்கட்ட முறைப்பாட்டினை செய்ய, திருகோணமலையில் திருமணம் முடித்திருக்கும் ஏறாவூரை சேர்ந்த சகோதரர் நிப்ராஸின் உதவியை நாடியபோது, அவரும் தனது சொந்த வேலையாக நினைத்து முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார்.

இம் முறைப்பாட்டினை இடுவதற்கு பல்வேறு தடைகள் இருந்த போதும்,
அதற்காக ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி திரு ரத்நாயக்க அவர்களோடு, கௌரவ சுபைர் ஹாஜி தொடர்பு கொண்டு விடயத்தை தெளிவு படுத்தியதும், முறைப்பாட்டினை இடுவதற்கு அவருடைய ஒத்துழைப்பு பெரிதும் உதவியது.

அதன் பின்னர்,
முகப்புத்தக தகவலை பார்வையிட்டவர்களுள் ஒரு சகோதரர், தொலைபேசியூடாக சுபைர் ஹாஜி, நிப்ராஸ் ஆகியோரோடு தொடர்பை ஏற்படுத்தி வேன் எங்கு இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க பெரிதும்  உதவினார்.

நேற்று மாலை , வேன் எங்கு இருக்கிறது என்பதை அந்த சகோதரர் மூலம் அறிந்து,
அதனை நேரடியாக பார்வையிட வேண்டுமென,  இன்று (20/11) காலையில் கௌரவ சுபைர் ஹாஜியும், வேனின் உரிமையாளரும்  குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குருனாகல் நோக்கி பயணமாகினார்.

களவாடப்பட்ட 57 -4386 இலக்க டொல்பின் வேனானது குருனாகல் வாகன  விற்பனை நிலையமொன்றினுல் இருப்பதை அவதானித்து விட்டு, உடன் திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு விடயத்தை தெரியப்படுத்த, அங்கிருந்து அவர்கள் குருனாகல் பொலிஸ் நிலையத்துக்கு விடயத்தை தெரிவிக்க,
குருனாகல் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி திரு நந்தன IP யின் தலைமையிலான குழுவினர் குறித்த வாகன விற்பனை நிலையத்துக்கு சென்று வேனை கையகப்படுத்தி, குருனாகல் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

இன்ஷாஅல்லாஹ், திங்களன்று பெரும்பாலும் திருகோணமலை பொலிசாரிடம் வேன் ஒப்படைக்கப்பட்டு, 
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தபடலாம்.

இவ் வேனை மோசடி செய்து கடத்திச் சென்றவன் சென்ற வாரமே வேறொரு களவு விடயத்தில் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இவ் வாகனத்தை கண்டு பிடிப்பபதற்கு பலவகைகளிலும் எங்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும்,
மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு ரத்நாயக்க, திருகோணமலை மாவட்ட SP., திருகோணமலை பொலிசார், குருனாகல் பொலிஸ் தலைமை அதிகாரி, குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி திரு நந்தன  IP,
கௌரவ சுபைர் ஹாஜி, சகோதரர் நிப்ராஸ் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் ஊர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பின் உறவுகளே 

யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
பல ரூபத்திலும் இன்று ஏமாற்றுப் பேர்வழிகள் அலைந்து திரிகிறார்கள்.

நாங்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே எங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

#ஏறாவூர் #நஸீர்
திருடப்பட்ட வேன் மீட்கப்பட்ட சம்பவம் : உதவிய அனைவருக்கும் நன்றி சொல்கிறார் வேன் உரிமையாளர். திருடப்பட்ட வேன் மீட்கப்பட்ட  சம்பவம் : உதவிய அனைவருக்கும் நன்றி சொல்கிறார் வேன் உரிமையாளர். Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5