நாட்டின் பல பிரதேசங்களில் மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம். சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை.



மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல 
இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப் பிரதேசங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

வங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று நாளை மறுதினம் அளவில் உருவாகின்றது.

இது மேலும் தீவிரமடைந்தது தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலை கொண்டிருப்பதுடன் அதனைக் தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் மேற்கு வடமேற்குத் திசையினூடாக இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு ஆழ்கடல் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 70_80 km இலும் கூடிய வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் காணப்படும்.

தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

நாட்டின் பல பிரதேசங்களில் மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம். சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை. நாட்டின் பல பிரதேசங்களில் மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம். சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை. Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.