நபிகள் நாயகம் - இணைய வழி கவியரங்கு : 28.11.2020* - Madawala News Number 1 Tamil website from Srilanka

நபிகள் நாயகம் - இணைய வழி கவியரங்கு : 28.11.2020*இலங்கையின் தலை சிறந்த பல கவிஞர்கள் கலந்து கொள்ளும்
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய இணைய வழி கவியரங்கு ஒன்று எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.  இதனை முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு திணைக்களம் ஒழுங்கு செய்துள்ளது. 

அகிலத்தாருக்கு அருள் கொடையான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வித்தியாசமான தளங்களினூடாக  அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.  காருண்ய நபி முஹம்மத் ( ஸல்) அவர்களின் அருமை பெருமைகளை பல்வேறு தலைப்புகளில் கவித்துவ ரசனை ததும்ப உலகம் முழுக்க ஒலிக்க வைக்கும் முயற்சியொன்றாக இக்கவியரங்கம் உள்ளது.  முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் மூலம் எதிர்வரும் சனிக்கிழமை ( 28.11.2020) இரவு 8.00 மணிக்கு நேரடி நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கும் இக் கவியரங்கை பார்த்து ரசிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

1. கவியரங்கு தலைமை - தமிழ் மாமணி அல் அஸூமத்

2. “சத்தியத்தின் தூதுவர் சாந்தி நபி” - காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிபுதீன்

3. “பொறுமையின் சிகரம் பெருமானார்” - பாவேந்தல் பாலமுனை பாருக்

4. “தலைமைக்கு தலைமை திருத்தூதர்” - கவிஞர் நியாஸ் ஏ சமத்

5. “பகைவருக்கு அருளிய பெருமானார்” - கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி

6. “அகிலத்தின் முன்மாதிரி அண்ணல் நபி” - கவிஞர் எம்.ரிஸான் ஸெய்ன்

7. “மாதருக்கு மாண்பளித்த மாநபி” - கவிஞர் ஷாமிலா ஷரீப் 

Facebook: https://www.facebook.com/DMRCASriLanka/

YouTube: https://www.youtube.com/channel/UC1Tnx0BwCmiy17jR0hsFoVQ
நபிகள் நாயகம் - இணைய வழி கவியரங்கு : 28.11.2020*  நபிகள் நாயகம் - இணைய வழி கவியரங்கு : 28.11.2020* Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5