இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய மேற்குக் கரைப் பகுதியை பார்வையிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய மேற்குக் கரைப் பகுதியை பார்வையிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ.ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக மோதல்
 நிலவி வருகிறது. 1967ம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடும் யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றது.

இந்த யுத்தத்தின்போது பலஸ்தீனர்கள் உரிமை கொண்டாடும் மேற்குக் கரையின் ( West Bank ) பல்வேறு பகுதிகளையும், சிரியாவின் கோலன் ஹைட்ஸ் ( Golan heights ) பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது.

மேலும், தான் கைப்பற்றிய பகுதிகளில் இஸ்ரேல் புதிய கட்டிடங்களையும் அமைத்து இஸ்ரேலியர்களை குடியேற்றியும் வருகிறது.குறிப்பாக மேற்குகரை பகுதியில் தொடர்ந்து புதிய நிர்மானங்களை (செட்டில்மெண்ட்) ( settlement ) இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த செட்டில்மெண்ட்கள் ( settlements ) கட்டிடங்கள் மேற்குகரையில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என உலக நாடுகள் அழைக்கின்றன.

அதேபோல் கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கட்டுமான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் என கூறுகிறது.

ஆனால், இந்த அனெக்சேஷன் ( annexation ) எனப்படும் நடவடிக்கையை இஸ்ரேலை விரிவுபடுத்துதல் என இஸ்ரேல் கூறிவருகிறது. சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறப்பட்டுவரும் மேற்குக்கரையிலுள்ள இஸ்ரேல் செட்டில்மெண்ட்கள், மற்றும் சிரியாவிடமிருந்து யுத்தத்தின் போது கைப்பற்றிய கோலன் ஹைட்ஸ் பகுதிகளை இஸ்ரேலின் ஒருங்கிணைந்த பகுதி என அமெரிக்கா சமீபத்தில் அங்கீகரித்தது.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் வந்துள்ளார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்.

இந்நிலையில், மேற்குக் கரையில் அமைந்துள்ள இஸ்ரேல் செட்டில்மெண்ட் பகுதிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று முன்தினம் பார்வையிட்டார். அதேபோல், சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோலன் ஹைட்ஸ் பகுதிகளையும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பார்வையிட்டார்.

அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பிலுள்ள சிரேஸ்ட நிலை பொறுப்பிலுள்ள உயர் அதிகாரியொருவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கோலன் ஹைட்ஸ் பகுதிகளுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்த பயணத்தின் மூலம் மேற்குக் கரை மற்றும் கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலின் அங்கமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

மேற்குக் கரை பகுதியில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்த பயணத்தின்போது பலஸ்தீன அதிகாரிகள் யாரையும் சந்திக்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் இப் பயணத்திற்கு சிரியா மற்றும் பலஸ்தீன தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய மேற்குக் கரைப் பகுதியை பார்வையிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ. இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய மேற்குக் கரைப் பகுதியை பார்வையிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ. Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5