டிஜிட்டல் மார்க்கட்டில் வியாபாரம் செய்வதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா??


இன்டர்நெட் இல்லாத நாள் , WiFi இல்லாத வீடு , டேட்டா இல்லாத இடம், இன்டர்நெட் வேகம்
குறைந்த கம்பியூட்டர், அல்லது வாட்ஸாப் வேலை செய்யாத ஸ்மார்ட் போன்  - இன்று இவ்வாறான நிலைகளைப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

உலகெங்கிலும் இன்று ஒரு டிஜிட்டல் புரட்சி ... நாளாந்த வாழ்வின் அனைத்துக் காரியங்களும் டிஜிட்டல் மயமாகின்றன. இதற்கு எமது இலங்கை நாடும் ஒரு விதிவிலக்கல்ல!


இலங்கையில் இவ்வருடம் (2020) ஜனவரி மாதத்தில் சுமார் 10.1 மில்லியன் இன்டர்நெட் பாவனையாளர்கள் பதிவாகியுள்ளனர். 2019 முதல் 2020 வரை இன்டர்நெட் பாவனையாளர்கள் 399,000 இனால் அதிகரித்துள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மாதத்தில் எமது நாட்டில் சமூக வலைத்தளங்களைப் (Social Media) பயன்படுத்துவோர் தொகை 64 இலட்சம் பேர். ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2020 வரை சமூக வலைத்தளங்களின் பயன்பாடு சுமார் 499,000 பேரினால் அதிகரித்துள்ளது. இந்தத் தொகைகள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டு தான் செல்கின்றனவே அல்லாமல் அவை பொதுவாகக் குறைவடைவதில்லை.


கீழே உள்ள படத்தில் உலகளாவிய ரீதியில் மக்கள் உபயோகிக்கும் சமூக வலைத்தளங்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

 
நன்றி: HootSuite
இவ்வாறான ஒரு நிலைமையில் மக்கள் அனைவரும் தாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு உலகளாவிய வலையமைப்பில் (Global Network)  உள்ளடக்கப்படுகின்றனர். இந்த வலையமைப்பானது வியாபாரத்துறையிலும் பொருட்களை அறிமுகம்  செய்வதற்காக , விளம்பரம் செய்வதற்காக , விற்பனை செய்வதற்காக மேலும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளை (After Sales Services) வழங்குவதற்காக அத்துடன் மிகப்பெரிய வாடிக்கையாளர் கட்டமைப்புக்களை (Customer Bases) உருவாக்குவதற்காக நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.


இன்று எமது வீடுகளில் சமையலறைக்குத் தேவையான காய் கறிகள், பழவகைகள் முதலியன தொடக்கம் மிக விலை உயர்ந்த பொருட்கள் வரை இணையத் தளங்களூடாக அல்லது இணையச் செயலிகளூடாக கொள்வனவு செய்வது மிக எளிதானதாகவும் பொதுவானதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.


வியாபாரம் செய்யக்கூடிய முறைகள், விளம்பரம் செய்யக்கூடிய வழிவகைகள், கல்வி கற்பிக்கக்கூடிய மற்றும் பயிலக்கூடிய முறைகள், வங்கிக்கொடுக்கல் வாங்கல்கள் செய்யக்கூடிய முறைகள், கட்டணங்கள் செலுத்தும் முறைகள், முன்பதிவுகள் மேற்கொள்ளும் முறைகள், ஆலோசனைகள் பெறும் முறைகள் போன்ற ஏராளமான விடயங்கள் இன்று இணையத்தின் பயண்பாட்டினூடாக எளிதாக்கப்பட்டிருக்கின்றன.


டிஜிட்டல் மார்கட்டிங் சம்பந்தமான அடிப்படைகளையும் மேலும் அதன் வழிமுறைகளையும் நுணுக்கங்களையும் அறிந்து கொள்வது மற்றும் அதில் முன்னேற முயற்சிப்பது இன்றைய சவால் நிறைந்த வியாபாரச் சூழலில் எமது நிறுவனங்கள் முன்னணி வகிப்பதிலும் மேலும் போட்டி நிறைந்த தொழிற் சந்தையில் சிறந்த தொழில்வாய்ப்புக்களையும் பதவி முன்னேற்றங்களையும் பெற்றுக்கொள்வதிலும் மிகப்பெறுமதியான அனுகூலங்களாக இருக்கின்றன.
அத்துடன் புதிய வியாபாரங்களை ஆரம்பம் செய்ய ஆவலுடன் முயற்சி செய்துகொண்டிருக்கும் பலருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு புதிய முன்னேற்றத்துக்கான நுழைவாயில் என்பதிலும் ஐயமில்லை.
டிஜிட்டல் மார்க்கட்டில் வியாபாரம் செய்வதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?? டிஜிட்டல் மார்க்கட்டில் வியாபாரம் செய்வதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?? Reviewed by Madawala News on September 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.