இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை.



இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு
பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

“ஐந்து வருட காலத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன்.


எனவே தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு பதவியிலிருந்து ஓய்வுபெற போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பதவியை விட்டு வெளியேற விரும்பவில்லை” என அவர் வலியுறுத்தியுள்ளார்.


கடந்த பொது தேர்தலில் மஹிந்த ராஜபக்ச குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.


இந்நிலையில், இன்னும் இரண்டு வருடங்களில் அதாவது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகி வருவதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு  பெறுவதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை. Reviewed by Madawala News on September 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.