UNP யின் வீழ்ச்சிக்கு சஜித்தே காரணம்



ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கு சஜித் பிரேமதாசவே காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


எம்பிலிப்பிட்டிய  பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.


இதேவேளை நாட்டின் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைந்தமைக்கான பிரதான காரணி சஜித் பிரேமதாச மாத்திரமே காரணம் எனவும் பிரதமர் இதன் போது கூறியுள்ளார்.


இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும்  காலம் வெகுதொலைவில் உள்ளதாகவும்  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

UNP யின் வீழ்ச்சிக்கு சஜித்தே காரணம் UNP யின் வீழ்ச்சிக்கு சஜித்தே காரணம் Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.