நாம் அளிக்கும் வாக்கு மஹிந்த அணிக்கு பலமான ஒரு அடியாக இருக்க வேண்டும் ..



வரும் பொதுத் தேர்தலிலே மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டும், இப்படியான சூழலிலே. எங்களைப் பற்றி ஐயா நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று முகத்தல் அடித்தால் போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். இன்றைய தேவை அது தான். அது ஒரு பலமான அடியாகவும் இருக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 


ஒட்டு மொத்தமாக தமிழ் இனம் ஒன்றாக வடக்கிலும் கிழக்கிலும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குகின்ற அந்த வாக்கினால் தான் அந்தச் செய்தியை அந்த அழுத்தமாக இறுக்கமாக முகத்தில் அடித்தால் போல் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அச்சுவேலியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது, இந்தத் தேர்தலிலே நாம் ஒரு குரலாக ஒலிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்று நாம் கேட்கின்றோம். அது ஒரு பலமான குரலாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அப்படியான ஒரு தேவை இன்று அத்தியாவசியமானதாக இருக்கின்றது. 


கடந்த சில நாள்களாக தென் இலங்கையில் இருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, அவற்றிலே குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஏதோ நாம் கொடுப்பவற்றை வாங்கித் திண்பவர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றார். நாங்கள் எமது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நாளிலில் இருந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள எமது அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்து, “அதெல்லாம் தர முடியாது, சமஷ்டி என்றால் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம், அரசியல் தீர்வு என்ற ஒன்றும் இல்லை, நாம் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியைக் கொடுப்போம்” என்று ஏதோ தாங்கள்தான் எங்களுக்கானதைத் தீர்மானிப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். 


இந்தத் தேர்தலிலே நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டும், இப்படியான சூழலிலே. எங்களைப் பற்றி ஐயா நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்யவேண்டிய தேவை கிடையாது என்று முகத்தல் அடித்தால் போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். இன்றைய தேவை அதுதான். அது ஒரு பலமான அடியாகவும் இருக்க வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார். 


மேலும் ஒட்டுமொத்தமாக தமிழ் இனம் ஒன்றாக வடக்கிலும் கிழக்கிலும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குகின்ற அந்த வாக்கினால்தான் அந்தச் செய்தியை அந்த அழுத்தமாக இறுக்கமாக முகத்தில் அடித்தால் போல் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொல்ல முடியும். 


அதனை எங்களுக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய தன்மானத்துக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய பிறப்புரிமையை நிலைநாட்டுவதற்காகச் செய்யவேண்டும். இன்று அதைச் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைவிட வேறு வழி கிடையாது. வேறு எந்தவொரு தமிழ் கட்சிக்கும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றுக்கு அனுப்புகின்ற திராணி கிடையாது. 


மாற்று அணி என வந்துள்ளவர்களை நீங்கள் திருப்பிப் பார்க்கூடாது. அவர்கள் எல்லாம், ஆசன ஆசைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிப்போனவர்கள். அத்தோடு இன்னுமொரு அணியிருக்கிறது, இளைஞர்களுக்கு அரச வேலைபெற்றுத் தருவதாக விண்ணப்பப் படிவம் வாங்கியிருப்பார். அதற்கு நீங்கள் விலைபோய்விடக் கூடாது. 


இந்தத் தேர்தலிலே டக்ளஸ் தேவானந்தா வெற்றிபெறக் கூடாது, அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றுக்குப் போகக் கூடாது. அப்படி அவர்கள் போவதாக இருந்தால், வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியாக ஒரு கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார். 


-யாழ். நிருபர் பிரதீபன்-

நாம் அளிக்கும் வாக்கு மஹிந்த அணிக்கு பலமான ஒரு அடியாக இருக்க வேண்டும் .. நாம் அளிக்கும் வாக்கு மஹிந்த அணிக்கு பலமான ஒரு அடியாக இருக்க வேண்டும் .. Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.