தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்.



இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, ஆகஸ்ட் 9 காலை 8:30 மணிக்கு பதவி ஏற்கிறார்.

களனி ராஜமஹா விகாரையில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.

அதே வேளை பொதுத்தேர்தலுக்கான  முடிகள் வெளியாகியுள்ள நிலையில் மக்கள் நாட்டின் பொதுச்சட்டம் மற்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள  சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவற்றை முழுமையாக பின்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை அமைதியாக கொண்டாட வேண்டும்.


கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியை அர்த்தமுடையதாகவும் கௌரவமாகவும் கொண்டாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ  தனது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


சவால்களை  வெற்றி கொண்டு புதிய  ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவும், இலக்கை அடைந்து கொள்ளவும் இரவு பகல் பாராது அயராது உழைத்த   நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.


குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட  எனக்கு விருப்பு வாக்குகளை வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வழங்கிய  குருணாகல் மாவட்ட மக்களுக்கு  மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள். தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள். Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.