அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன? - மஹிந்த தேசப்பிரிய விளக்கம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன? - மஹிந்த தேசப்பிரிய விளக்கம்


எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து
வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் கடந்த சனிக்கிழமையாகும் (08) போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மூன்று கடிதங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் கூறினார்.

முதலாவது கடிதத்தை அத்துரலிய ரத்தன தேரர் சமர்பித்துள்ளதாகவும, இரண்டாவது கடிதம் அந்த கட்சியின் தலைவரினால் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் முன்வைத்துள்ள கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் அவரே மூன்றாவது கடிதத்தை சமர்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எமது மக்கள் சக்தி கட்சி சார்பில் ஒரேயொரு தேசியப்பட்டியல் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

அந்த தேசியப்பட்டியல் பதவிக்கு ஞானசார தேரர் தெரிவுச் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஞானசார தேரர் தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையின் மூலம் எமது மக்கள் சக்தி கட்சியில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தேரர்கள் சிலர் நேற்று (10) ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெரிவித்திருந்தனர்.

எனினும் ஞானசார தேரர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளரே அறிவிக்க வேண்டும் எனவும் ஆனால் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போயுள்ளதாக பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.

வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தான் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவானதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்ததை அடுத்தே இந்த பிரச்சினை பூதாகரமாகியது.

ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் உள்ளிட்டோர் அந்த நியமனம் செல்லுப்படியற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ள நிலையில், ஞானசார தேரரை தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடுவதற்கு அந்த கட்சியின் செயற்குழு கடந்த ஞாயிற்று கிழமை தீர்மானித்திருந்தமை குறிப்பிடதக்கது.

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன? - மஹிந்த தேசப்பிரிய விளக்கம் அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன? - மஹிந்த தேசப்பிரிய விளக்கம் Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5