அடுத்த வாரம் தீர்மானமிக்க வாரம் !



எதிர்வரும் வாரம் தீர்மானம் மிக்கது என ரானுவ தளபதி சவேந்திர சில்வா கூறினார்.


தற்போதைக்கு சமூகத்தில் பரவும் அபாயம் இல்லை. எதிர்வரும் நாட்களில் நாட்டில் பரவாது என்றும் எம்மால் கூற முடியாது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 3 பிரிவினர் உள்ளதாக கூறிய அவர் ஒரு பிரிவினர் அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள் எனவும் மற்ற பிரிவினர் அங்கு பனியாற்றுபவர்கள்
எனவும் மூன்றாவது பிரிவினர் அங்கு புனர்வாழ்வு பெறுபவர்களை பார்க்க வந்தவர்கள் என கூறினார்.

புனர்வாழ்வு பெறுபவர்கள் தொடர்பில் பிரச்சினை இல்லை என கூறிய அவர் அங்கு பணியாற்றிய சிலர் விடுமுறையில் வெளியே சென்றுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் வாரம் தீர்மானம் மிக்கது. சமூகத்தில் இருந்து நோயாளர்கள் பதிவாவார்களா என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். அவ்வாறான நிலமை ஏற்படாது என என்னால் கூறமுடியாது.

கந்தகாடு பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் புனர்வாழ்வு பெற்றுவந்த 429 பேர், ஊழியர்கள் 47 பேர், தொடர்புகளை பேணிய 16 பேர் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த வாரம் தீர்மானமிக்க வாரம் ! அடுத்த வாரம் தீர்மானமிக்க வாரம் ! Reviewed by Madawala News on July 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.