நாம் வைரச் சின்னத்தில் சுயேட்சைக் குழுவாக களமிறங்கியுள்ளது முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அல்ல.


(எம்.எம்.எம். ரம்ஸீன்)  
கண்டி மாவட்டத்தில் இழக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காக
வைரச்சின்னத்தில் சுயேட்சைக் குழு களமிறங்கியுள்ளதேயன்றி   முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அல்ல என்று கண்டியில் வைரச்சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும்  சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளர்  இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.


கண்டியில் வைரச்சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து  29.07.2020 மாலை கெலிஓயாவில் நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,


கண்டி மாவட்டத்தில் 2000 இல் மூன்று, 2001 இல் மூன்று, 2004 இல் மூன்று, 2010 இல் நான்கு என்று உறுதிப்படுத்தப்பட்டு வந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 2015 இல் இரண்டாக குறைவடைந்துள்ளது. இப்பிரதிநிதித்துவ குறைப்பை வேண்டுமென்று செய்தனர். கண்டியில் இழந்த பிரதிநிதித்துவ இடைவெளியை நிரப்புவதற்கு களமிறங்கியுள்ளோம். இதற்காக மற்றவர்களை மிதித்துக் கொண்டு பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

கண்டியில் போட்டியிடுபவர்கள் 20 வருடங்களுக்கும் மேல் பாராளுமன்றத்தில்  பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மட்டுமன்றி ஆறாவது தடவையாக தேர்தலில் நிற்கின்றார்கள்.

இவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு சேவை செய்திருந்தால் மக்கள் அவர்களை தெரிவு செய்வார்கள்.


ஐக்கிய தேசிய கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டது. இதனால  முஸ்லிம் தலைவர்களும் இரண்டாகப் பிளவுபட்டனர். ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடும் போது ஏன் தலைவர்கள் பிளவுபட வேண்டும். தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட்டிருக்க முடியும். தலைவர்கள் இரு அணிகளாகப் பிரியும் போது சமூகம் பாதிக்கப்படுகின்றது.  பெரிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தான் வாக்குகளைப் பிரித்துக் கொண்டுள்ளனர். ஆனால், நாம் வாக்குகளைப் பிரிக்க வந்தவர்கள் வீண்பழி சுமத்துகின்றனர்.


அரசியலில் ஏமாற்று, களவு, பொய், சேறு பூசுதல் செய்வதற்கு எம்மத்தியில் பலர் உள்ளனர். இந்த அசிங்கங்களை செய்வதற்கு நாம் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம்கள் அரசியல் கட்சிகள் மீது பற்றும் வெறியும் பிடித்தவர்கள் அல்ல பொதுத்தேர்தலில் உறுதிப்படுத்துவோம். முன்னாள் அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீத் சகல இன மக்களுக்கும் தலைவராக இருந்தார். 


கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முஸ்லிம் தலைவர்கள் முன்வரவில்லை.  தம்புள்ள பள்ளிவாசல்  பிரச்சினை  18 வருடகாலப்  பிரச்சினையாகும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முஸ்லிம் தலைவர்கள் சம்பந்தப்பட்டோருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தாமல்  ஊடகங்களில்  அறிக்கை விட்டனர் என்றார். 



நாம் வைரச் சின்னத்தில் சுயேட்சைக் குழுவாக களமிறங்கியுள்ளது முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அல்ல. நாம்  வைரச் சின்னத்தில் சுயேட்சைக் குழுவாக  களமிறங்கியுள்ளது    முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக அல்ல. Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.