மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் - உலக சுகாதர அமைப்பு



மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.


சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா (கொவிட் 19) வைரஸினால் ஜூலை 30 ஆம் திகதி நிலவரப்படி உலகிலேயே ஒரு கோடியே 72 லட்சத்து ஆயிரத்து, 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஜெனிவா நகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் மீண்டுள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது ஆகையால் மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் - உலக சுகாதர அமைப்பு மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் - உலக சுகாதர அமைப்பு Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.