தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது.


(எம்.எம்.எம். ரம்ஸீன்)  

தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக முன்னாள்
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலு குமார் தெரிவித்தார்.


கெலிஓயா கலுகமுவையில்  நடைபெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,
ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பக்கும் சக்தி சிறுபான்மையினர் என்பதை மீண்டுமொரு தடவை நிரூபிக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களின்  ஆதரவைப்  பெற்றவர்களால்  தான் ஆட்சி அதிகாரத்தை பெற முடியும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறுபான்மை சமூகங்களின் கௌரவத்தைப் பாதுகாப்போம். தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று பகிரங்கமாகக் கூறும் வீரவன்ச, கம்மன்பில முதலானோரின் ஆணவத்தை அடக்கியாக வேண்டும். இவர்கள் எம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். சிறுபான்மை வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவத்தை குறைத்து அரசியல் தலைமைகளை பலவீனப்படுத்த  முயற்சிக்கின்றனர்.


ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மையினருக்குண்டு என்பதை மீண்டுமொரு தடவை நிரூபித்தாக வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகங்களுக்கு சிறு சறுக்கல் ஏற்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் இச்சறுக்கலை திருத்திக் கொள்வோம். வாக்குரிமை என்பது எமது வாழும் உரிமையாகும். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு வாழப் போகின்றோம் என்பதை வாக்குரிமை வழங்குகின்றது. பொதுத் தேர்தலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாம் செய்யும் தவறை ஐந்து வருடங்களுக்கு திருத்திக் கொள்ள முடியாது.


தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மகிந்தவின் கையாளாக மாறியுள்ளார். அவர் எம்மை கூறுபடுத்த முயற்சிக்கின்றார் என்றார். 
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது. தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது. Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.