முகக் கவசத்திற்கு முக்கியத்துவம்.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டிலுள்ள அனைவரும்  (28) ம் திகதி முதல் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு
அமைய வீட்டை விட்டு வெளிச் செல்லும் நபர்கள் முகக் கவசங்களை அணிந்து செல்வதை காணமுடிகிறது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தும்  பொதுமக்கள் இவ்விடயத்தில் அசமந்தப் போக்கில் இருந்தனர். ஆனால் முகக் கவசம் அணியாமல் சென்றால் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிச் செல்லும் போது முகக் கவசங்களை அணிந்து தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருவதை அவதானிக்க முடிகிறது.

அத்தோடு, குறித்த பகுதியில் வீதியோர வியாபாரிகளினால் அதிகளவு முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முகக் கவசத்திற்கு முக்கியத்துவம். முகக் கவசத்திற்கு முக்கியத்துவம். Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.