இலங்கையில் 125 பேர் ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளனராம்! - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கையில் 125 பேர் ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளனராம்!


எம்.எப்.எம்.பஸீர்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
பாதுகாப்புப் பிரிவு  கடந்த 2019 ஏப்ரல் 21 வரை அறிந்திருக்கவில்லை என  ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில்  பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எஸ்.ஜி.சதரசிங்க நேற்று சாட்சியமளித்தார்.

அத்துடன் இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இருப்பதாக அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் நாணயக்கார,  2019.02.03 அன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எஸ்.ஜி.சதரசிங்க  இதன்போது  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்   நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில்  அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில்  பணியாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  எஸ்.ஜி.சதரசிங்க  மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,  ‘ ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானி, அரச உளவுச் சேவையின் அதிகாரிகள் உள்ளிட்டோருடன்  மாதாந்த சந்திப்புகளை நடத்திய பின்னர் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்படும். வழக்கமாக ஜனாதிபதியின் நிகழ்கால  பாதுகாப்பு குறித்த அறிக்கையைப் பெறும் நாங்கள் , அதன் பின்னர் ஜனாதிபதி விசேடமாக கலந்துகொள்ள உள்ள கூட்டங்கள், நிகழ்வுகள் குறித்து அவதானம் செலுத்தி பாதுகாப்பு மதிப்பீட்டை முன்னெடுப்போம். ‘ என தெரிவித்தார்.
இலங்கையில் 125 பேர் ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளனராம்! இலங்கையில் 125 பேர் ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளனராம்! Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5