கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது - கொழும்பு மாநகர மேயர்



அரசாங்கம் செயற்பட்ட விதம் காரணமாகவே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் இலங்கை வெற்றிகரமான நிலைமைக்கு வந்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


சிறந்ததை சிறந்தது என்றும் தவறை தவறென்றும் கூற தான் தயங்கியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


மே மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் அனைத்தும் இன்னும் சரிப்படுத்தப்படவில்லை என்பதால், தேவையான விடயங்களுக்காக மாத்திரம் நகருக்குள் வருமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்திற்கு துணை போகின்றீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மேயர், பெண் என்ற வகையில் தனக்கு முதுகெலும்பு இருப்பதாகவும் பிளவுப்பட்ட அரசியலுக்கு பதிலாக ஒற்றுமையான அரசியலை தாம் விருப்புதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது - கொழும்பு மாநகர மேயர் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது - கொழும்பு மாநகர  மேயர் Reviewed by Madawala News on May 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.