சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.



கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது  சடலங்களை

எரிப்பதனை ஆட்சேபித்து உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை கட்டணமின்றி பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள பிரபல்யமான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக முன்னாள் மேல் மாகாண சபை உறுபபினர் சாபி றஹீம் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
உண்மையிலேயே சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களது சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகுவதையிட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக எனவும் இந்த நாட்டினுடைய முஸ்லிம் சமூகத்தினுடைய வரலாற்றில் வாழ் நாள் நன்றிமறவாத மனிதராக திகழ்வார் எனவும் அவர் தெரிவித்தார்.



;இந்த வழக்குத் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் எத்தனையோ சட்டத்தரணிகள் அரசியல் தலைவர்கள் இருந்த போதிலும் தற்போது திராணியற்ற நிலையிலுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மை.


இருப்பினும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களுடைய உடலை உலக சுகாதார ஸ்தாபனம் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விதிகளுடன் புதைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.


ஆனால் இலங்கையில் முஸ்லிம்களின் உடலை அடக்கும் செய்யும் விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் அரசியல் இலாபம் கருதி வீரியமிக்க செயற்பாடாக மேற் கொண்டு வருகின்றார்கள். இதனால் அனைத்து முஸ்லிம் மக்களது மனங்களும் புண்படுத்தப்பட்டுள்ளன. இம்மக்களது பிரச்சினையை சகோதர சிறுபான்மையின தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் படுத்தும் சட்டத்தரணி சுமந்திரன் மட்டுமல்ல பெரும்பான்மையின மக்களைச் சார்ந்த அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மனமுவந்து காருண்ணியத்துடன் நோக்க வேண்டி இருக்கிறது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முடக்கப்பட்ட நாடு தளர்த்தப்பட்டு மீளவும் இன்று திறந்து விடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இது தேர்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் வேலைத் திட்டமாக இருப்பின் இதனால் ஏற்படும் விளைவு ஆபத்தானது. முழு நாட்டு மக்களையும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளிவிடுமளவுக்கு அபாயரகமானது.


இது எவ்வாறாயினும்; நாடு தளர்த்தப்பட்டபின்னர் மக்கள் நடந்த கொள்ளும் விதம் முடக்கப்பட்டு இருந்த காலத்தை விட இனி வரும் காலங்களில் மிக மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமானதாகவும், நீண்ட ஆயுளுடனனும் கூடிய மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய வகையில் அரசாங்கம் விதித்துள்ள சமூக இடைவேளியைப் பேணி சுகாதார ஒழுங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பேணி நடத்தல் அவசியம்.


இந்த இக்கெட்டான கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனமுடைந்த நிலையில் உள்ள நேரத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை இஸ்லாமிய மார்க்க விழுமியங்களுக்கு மாறாக தகனம் செய்வதை ஆட்சேபித்து உயிர் நீதி மன்றத்தில் எந்தவொரு கட்டணமுமின்றி வாதிடுவதற்கான ஆஜராகவுள்ள சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்கு என் சார்பாகவும் எமது முஸ்லிம் சமூகம் சார்ப்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைந்து கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அம்மார்
10-05-2020
சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் வாழ்நாள் பூராவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். Reviewed by Madawala News on May 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.