முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் கையான்ட விதம் கவலையளிக்கிறது .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் கையான்ட விதம் கவலையளிக்கிறது ..கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் 
அரசாங்கம் கையான்ட விதம் கவலளிப்பதாகவும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஎஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையயில் சுபைர் அவசர பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து (21) உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையயில்...

முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட COVID 19 தொற்று நோயானது, மக்களுடைய அன்றாட செயற்பாடுகளை முடக்கி, அவர்களது வாழ்வாதாரங்களிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் எமது நாடு இன்னும் அபாய வலயத்திலே உள்ள போதும், Covid 19 நெருக்கடியை எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. இதேவேளை எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் கையான்ட விதம் கவலையளிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக எமது நாட்டில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காமல் எரித்தமையினால் முஸ்லிம் சமூகம் கடும் வேதனைகளையும், வலிகளையும் சுமந்துகொண்டிருக்கிறது. 

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய மத சடங்குகளின் பிரகாரம் அடக்கம் செய்வது, உயிருடன் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும். அந்த அடிப்படையில் ஒருவர் மரணிக்கின்ற போது அந்த ஜனாஸாவுக்குரிய முக்கிய 4கடமைகளையும் நிறைவேற்றி அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். மரணித்த முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்வது, இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு விடயமாகும்.

எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மிகத் திட்டமிட்டு எரிப்பதாகவே முஸ்லிம் சமூகம் கருதுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கோரியும் அவை கருத்திற்கொள்ளப்படவில்லை. முஸ்லிம்களின் கோரிக்கைகள், உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை, மேலும் ஜனாஸாக்கள் தொடர்ச்சியாக தகனம் செய்யப்பட்டு வருகிறது.

குறித்த வைரஸ் உலகில் 180 நாடுகளை ஆட்கொண்டுள்ள போதும், அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலும், மரணிக்கும் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக மரணித்த உடல்களை புதைப்பதற்கும் அந்த ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் பல்லாயிரக்கணக்கான உடல்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் போன்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்ற நாடுகளில் கூட அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அடக்கம் செய்ததனால் எந்தவொரு பாதிப்புக்களும் ஏற்படவுமில்லை, ஏற்படும் என விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பவுமில்லை.

ஆனால் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வதற்கு,  2020 ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியான 2170/8ஆம் இலக்க அதிவிடே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மிகுந்த மன வேதனையும் மன உளைச்சலையும் அடைந்தனர்.

குறிப்பாக, 2020.05.08ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்ததாக கூறப்பட்டு எரியூட்டப்பட்ட 52 வயதுடைய, மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண், உண்மையிலேயே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும், தவறுதலான ஆய்வுகூட அறிக்கையின் அடிப்படையிலேயே அவர் கொரோனா நோயாளியாக கருதப்பட்டு, எரிக்கப்பட்டதாகவும் வெளியான பிந்திய செய்திகளினால், முஸ்லிம் சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகியது.

பல்லின சமூகம் வாழுகின்ற எமது நாட்டில் மத நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு என்பனவற்றைக் கருத்திற் கொண்டும், இலங்கை வாழ் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை நடாத்துவதற்கும் மேற்குறித்த 2170/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக குறித்த வைரஸ் தொற்றினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு திருத்தம் செய்யும் கட்டளையை பிறப்பிக்குமாறு இந்த சபையூடாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இப்பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் கையான்ட விதம் கவலையளிக்கிறது .. முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில்  அரசாங்கம் கையான்ட விதம் கவலையளிக்கிறது .. Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5