கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்பாடசாலைகளை மீள திற்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன்
கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

அதனால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5