மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் பிற்பகல்
வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இம் மாகாணங்களின் சில இடங்களில் 75mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பதிவாகலாம்.

கிழக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

           ‌‌‌      கடல் பிராந்தியங்களில்

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணித்தியாலத்திற்கு 20_30km வேகத்தில் மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருக்கும் காற்று வீசும்

கடல் பிராந்தியங்கள் சில வேளைகளில் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரி
தேசமானிய
மொஹமட் சாலிஹீன்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை... மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை... Reviewed by Madawala News on April 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.