தான் ஒரு உளவுத்துறை அதிகாரி என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார்.


தான் ஒரு  உளவுத்துறை அதிகாரி  என தெரிவித்து வாட்ஸ்அப் 
போன்ற சமூக வலைகளில் போலி தகவல்களை பரப்பிய ஒருவர்  அடையாளம் காணப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி  அஜித் ரோஹான தெரிவித்தார்.

முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி வருகிறார்கள்   என்று தனது மேலதிகாரி  தனக்கு அறிவித்ததாகக் கூறி குரல் மூல தகவல்  வெளியிட்ட அந்த  நபர்,  உளவுத்துறை  உறுப்பினராக இருப்பதாகவும் அந்த voice message இல்  தெரிவித்துள்ளார். 

போலி ஆடியோ தகவலை  வெளியிட்ட நபரும், அதை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிய நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஐ.ஜி  அஜித் ரோஹான மேலும் கூறினார்.

முஸ்லிம்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று  எவ்வாறு நோயை   பரப்புகிறார்கள்  என்பதை நிரூபிக்க தம்மிடம்  வீடியோக்கள் இருப்பதாக அவர் ஆடியோ மெசேஜ்ஜில்  தெரிவித்து இருப்பது முற்றிலும் பொய்யான விடயம்  என்று காவல்துறை மேலும்  கூறுகிறது.

இந்த நாட்களில் சூப்பர் மார்க்கெட்   எதுவும் திறந்து  இல்லை.  எனவே ஒரு முஸ்லீம் அல்ல, யாரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்ல முடியாது.  இது  இனங்கள் இடையே  வெறுப்பை பரப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை .

இத்தகைய தவறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்.  நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பீர்கள் என்றால் , யாரும் அதை விளம்பரப்படுத்த மாட்டார்கள்.  உங்களுக்கு ஏதாவது தகவல்  கிடைக்கும்போது, பகிரும் முன் ​​தர்க்கரீதியாக சிந்தியுங்கள். 
என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

தான் ஒரு உளவுத்துறை அதிகாரி என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார். தான் ஒரு  உளவுத்துறை அதிகாரி  என தெரிவித்து, முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டார். Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.