“ஓட்டோ சாரதிகளுக்கு நிம்மதி தேவை , பினான்ஸ் கம்பனிகள் தொல்லை படுத்துவதாக நமக்கு முறைப்பாடுகள் வருகின்றன.


(றிஸ்கான் முகம்மட்)
“வங்கிக் கடன்களை அறவிடவேண்டாம் என அரசாங்கம் 
அறிவித்துள்ளபோதிலும், கொழும்பில் தவணைக் கட்டணங்களுக்கு ஓட்டோக்களை வாங்கி, அன்றாடம் சம்பாதித்துவந்த ஓட்டோ சாரதிகளை பினான்ஸ் கம்பனிகள் தொல்லைபடுத்துவதாக நமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. 


நாடும் நாட்டுமக்களும் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இத்தருணத்தில், பினான்ஸ் கம்பனிகள் மனிதாபிமானத்துடன், அரசகட்டளையை ஏற்று நடக்கவேண்டும்” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கல்விமான் வி.ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன,


“கொழும்பில் சுமார் 3 இலட்சம் ஓட்டோக்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தவணை முறையில் கொள்வனவு செய்யப்பட்டவையாகும். 


தமது அன்றாட சம்பாத்தியத்தை இந்த ஓட்டோக்கள் மூலமாகவே அதன் சாரதிகள் பெற்றுவந்தனர். அன்றாடம் சம்பாதித்துத் தம் குடும்பத்தைக் கவனித்தது மாத்திரமன்றி பினான்ஸ் கம்பனிகளுக்கான தவணைக் கட்டணங்களையும் தவறாது செலுத்தி வந்தனர்.


“நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால், ஓட்டோவை நம்பித் தொழில்செய்தவர்களின் வருமானம் பூச்சியமாகியுள்ளது. தம் குடும்பச் செலவையே கவனிக்க முடியாமல் திண்டாடும் இத்தகைய ஓட்டச் சாரதிகளை, பினான்ஸ் கம்பனிகள் கடன்களைக் கட்டுமாறு தொல்லை கொடுப்பது ஏற்புடையதல்ல. அவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். 

“அரசாங்கம் கடன் அறவிடவேண்டாம் என்று சொல்கின்றபோதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால்தான், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் நிர்ப்பந்தத்துக்குள்ளாகிறார்கள். எனவே, இவ்விவகாரத்தில் அரசாங்கம் உரிய அக்கறைசெலுத்துவதோடு, பினான்ஸ் கட்டமுடியாமல் தவிக்கும் ஓட்டோ சாரதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று, ஜனகன் மேலும் தெரிவித்துள்ளார்.
“ஓட்டோ சாரதிகளுக்கு நிம்மதி தேவை , பினான்ஸ் கம்பனிகள் தொல்லை படுத்துவதாக நமக்கு முறைப்பாடுகள் வருகின்றன. “ஓட்டோ சாரதிகளுக்கு நிம்மதி தேவை , பினான்ஸ் கம்பனிகள் தொல்லை படுத்துவதாக நமக்கு முறைப்பாடுகள் வருகின்றன. Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.