முஸ்லிம்கள் மரணித்தால் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

முஸ்லிம்கள் மரணித்தால் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி.. அன்ஸிர் -

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகரித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் மரணித்தால்  இஸ்லாமிய முறைப்படி  அடக்கம் செய்ய முடியுமா, என்ற மிகப்பெரும் கவலை சமூக மட்டங்களில் அதிகரித்திருந்தது.


இந்நிலையில் இதுகுறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்ததுடன், இதுபற்றி கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், இதில் கவனம் செலுத்தியது.


ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் முஸ்லிம் சமூகத்தின் இந்தக் கவலையை, அரச மேல் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.


இதையடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, முஸ்லிம்கள் யாரும் மரணிப்பார்களாயின், அவர்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யலாம் என அரச மேல் மட்டம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.


இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய, முன்னான் மேல் மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரம்பபொல, முஸ்லிம்கள் எவரேனும் மரணித்தால் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய முடியுமென அறிவித்துள்ளார்.


இது முழு இலங்கைக்கும் பொருந்தக்கூடியது எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த  தகவல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும், அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.அல்ஹம்து லில்லாஹ்


இவ்விடயத்தில் ஜம் இய்யதுல் உலமா சபை, முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், குறிப்பாக பல முஸ்லிம புத்திஜீவிகள் (முன்னால் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்லீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயில் முஸ்தபா, கொழும்பு மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கலக மானியங்கள் ஆணைக்கு உறுப்பினமான கலாநிதி ருவைஸ் ஹனீபா, டாக்டர் ரிஸ்வி ஷரீப்டீன், சிரேஷ்ட சட்டத்தரணி நத்வி பஹாவுதீன் எனப் பலர்), மற்றும் முஸ்லிம் மருத்துவர்கள் சங்கம், சனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் பெரும் பங்காற்றியுள்ளனர். 


இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.


திணைக்களம் இவர்கள் அனைவரதும் உதவியை பெற்று நேரடியாக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளருடனும், சுகாதார அமைச்சின் செயலாளருடனும், சனாதிபதி செயலகத்துடனும்,  சனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி அவர்களுடனும்  ஒருங்கிணைப்புச் செய்தது என்பதனையும் அறியத்தருகிறேன்.


பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவர்களும் எமக்கு உதவினார்.


அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முடிவு வெளிவரும் வரை இறைவனைப் பிரார்த்திப்போமாக!


ஏபிஎம் அஷ்ரப்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டி வுல்கள் திணைக்களம்

25.03.2020


முஸ்லிம்கள் மரணித்தால் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி.. முஸ்லிம்கள் மரணித்தால்  இஸ்லாமிய முறைப்படி  அடக்கம் செய்ய அனுமதி.. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5