கொரோனா வைரஸ் இளைஞர்களையும் தாக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்க முடியாமல் மனித சமுகம் திணறி வருகிறது. இந்த வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அதிகளவில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இளம் வயதினரை எளிதில் தாக்காது என்று கருதப்பட்ட நிலையில், தற்போது இளைஞர்களையும் கொரோனா தாக்க தொடங்கியுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில்:-


இன்று இளைஞர்களுக்காக ஒரு தகவலை கூறுகிறேன். கொரோனாவிலுருந்து நீங்களும் தப்பிக்க முடியாது. கொரோனா வைரசானது உங்களை வாரக்கணக்கில் வைத்தியசாலையில் முடக்கி விடலாம். உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். நீங்கள் நோய் வாய்ப்படாவிட்டாலும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நோய்த்தாக்கம் இருக்கும். எனவே, பொது இடங்களுக்கு செல்லும்போது இளைஞர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் இளைஞர்களையும் தாக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை கொரோனா வைரஸ் இளைஞர்களையும் தாக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.