கோரோனாஅச்சுறுத்தல் உள்ள “சிகப்பு பிரதேசமாக” பேருவளை அடையாளமிடப்பட்டது.கோரோனா அச்சுறுத்தல் உள்ள  “சிகப்பு பிரதேசமாக”  பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு  அடையாளமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 135 பேர் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டமை அந்த பிரிவில் 206 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மற்றும்  பேருவளை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை என்பவற்றை கருத்தில் கொண்டு  கோரோனா அச்சுறுத்தல் உள்ள “சிகப்பு பிரதேசமாக” பேருவளை  அடையாளமிடப்பட்டதாக   பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருன செனவிரத்ன குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


களுத்துறை மாவட்டத்தில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் பேருவளை சுகாதார வைத்திய பிரிவினை சேர்ந்தவர்களாவர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கோரோனாஅச்சுறுத்தல் உள்ள “சிகப்பு பிரதேசமாக” பேருவளை அடையாளமிடப்பட்டது. கோரோனாஅச்சுறுத்தல் உள்ள  “சிகப்பு பிரதேசமாக”  பேருவளை அடையாளமிடப்பட்டது. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5