"எமது அயலவரை அரவணைப்போம்" நுவரெலியாவில் 350 உலர் உணவுபொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிகழ்வு .


அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், நேற்றைய தினம் YOUNG ENTREPRENEURS,NUWARA ELIYA அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட

 "எமது அயலவரை அரவணைப்போம்" செயற்திட்டமானது மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.இதன் போது
ரூபா.3000/- பெறுமதியான சுமார் 350 உலர் உணவுபொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த மனிதநேய பணிக்கு பணத்தாலும்,உடல் உழைப்பாலும் ,ஆலோசனைகளாலும் ,செல்வாக்கினாலும் ,துவாக்களினாலும் பல்வேறு உதவிகளை வழங்கிய வியாபாரிகள்,தனவந்தர்கள், இளைஞர்கள்,ஊரின் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பொதிகள் பங்கிடும் போது ஹாவாஎளிய அஷோகாராம பௌத்த விகாரைக்கும் , நுவரஎளிய பிரதான வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கும் (PALLIATIVE CARE UNIT “ONCOLOGY”)
பொதிகள் பங்கிடப்பட்டது மிகவும் வரவேற்பினை பெற்றது.

இதன் போது எமக்கு மார்க்க வழிகாட்டுதல்களை வழங்கிய ஜம்மிய்யத்துல் உலமா நுவரஎளிய கிளையின் கௌரவ தலைவர்,
அஷ் ஷேக்.சிராஜ் (ரஷாதி) மௌலவி
அவர்களுக்கும் நாம் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்.

இச் செயற்பாடுகளின் போது எம் தோளோடுதோள் நின்ற
அனைத்து பள்ளிகளினதும்
நிர்வாக சபை உறுப்பினர்கள், VOLUNTEERS CLUB
அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளர்களே !!!!

இதில் பங்கேற்ற அனைவரினதும் நல்ல நிய்யத்துக்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று பரக்கத் செய்வானாக ......
"எமது அயலவரை அரவணைப்போம்" நுவரெலியாவில் 350 உலர் உணவுபொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிகழ்வு .  "எமது அயலவரை அரவணைப்போம்" நுவரெலியாவில்  350  உலர் உணவுபொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிகழ்வு . Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.