தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மடவளை மாஸ்டர் M.H.M பாஹித் இன் மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து அசத்தல்.


இம்மாதம்   8,9,10 ஆகிய தினங்களில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில்  நடைபெற்ற மூன்றாவது
தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் IMA - Iron Muaythai Academy மிகச்சிறந்த முறையில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிக்கிண்ணத்தை வென்றெடுத்தது.

இத்தேசிய மட்ட போட்டியில் Sri Lanka Army , Sri Lanka Navy உட்பட பல விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியது குறிப்படித்தக்கது.

மூன்றாவது தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகள் - தேசிய முய்தாய் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. (Muaythai Association of Sri Lanka), இது இலங்கை விளையாட்டு அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டு இயங்கிவரும்  உத்தியோகபூர்வ அமைப்பாகும்.

இந்த வைபவத்தில் மதிப்புக்குரிய  Duminda Dissanayake, M.P , State Minister of Youth Affairs அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

போட்டியாளர்களை பயிற்றுவிப்பதில் மடவலையை சேர்ந்த Master M.H.M Fahid அவர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் தினமும் மடவளையில் இருந்து மாவனல்லை சென்று போட்டியார்களை மிகச்சிறந்த முறையிலும் திறமையான முறையிலும் பயிற்றுவித்தார்.

கடந்த 6 மாதங்களாக தொடர்ச்சியாக கடும் பயிட்சிகளில் இடுபட்ட IMA போட்டியாளர்கள் மிகச்சிறந்த முறையில் சண்டையிட்டு வெற்றிக் கிண்ணம் வரை கழகத்தை முன்னெடுத்துசென்றனர்.

மாவனல்லை, கெலிஓயா மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் இயங்கி வரும் IMA கழக Dojo களை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.


நாவலபிட்டிய போட்டியாளர்களை பயிற்றுவிப்பதில் Master Saman Jayalath அவர்களின் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

பதக்கங்களின்  விபரம்
தங்கம் = 24
வெள்ளி =  29
வெண்கலம்  = 23
------------------------------
மொத்தம் = 76

இவ்வெற்றியை அடைய உதவி செய்த பெற்றார்,நலன் விரும்பிகள், மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் IMA  கலகம் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
--

Thank you
IMA - Sri Lanka





தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மடவளை மாஸ்டர் M.H.M பாஹித் இன் மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து அசத்தல். தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மடவளை மாஸ்டர் M.H.M பாஹித் இன் மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து அசத்தல். Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.