பகிரப்படும் வீடியோ .... கொரோனா வைரஸ் தொற்றியவரை சுட்டுக் கொலை செய்கிறதா சீனா? (இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை) - Madawala News Number 1 Tamil website from Srilanka

பகிரப்படும் வீடியோ .... கொரோனா வைரஸ் தொற்றியவரை சுட்டுக் கொலை செய்கிறதா சீனா? (இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை)


  - ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் -

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை சீனா கொலை செய்கிறது” என்று போலியான காணொளி
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. குரோதம் நிறைந்த, மனித இயல்புக்கு முரணானது என்பதுடன் மனிதாபிமானத்திற்கு சவால் விடுக்கும் வகையில் சீனாவுக்கு அவதூறை ஏற்படுத்தும் விமர்சனத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.


இந்த கொரோனோ தொற்று நோய்க்கான போராட்டத்தில் சீன அரசாங்கம் மிகவும் விரிவான மற்றும் கடுமையான தவிர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஹூபெய் மாகாணத்திற்கு உதவ, அவ் மாகாணத்திற்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

10 நாட்களுக்குள்  இரண்டு விசேட வைத்தியசாலைகளை நிர்மாணித்து திறந்தும் வைத்துள்ளோம். இந்த தொற்று நோயை தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் $10 Billion ( சுமார் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் கோடி ரூபா ) ஒதுக்கப்பட்டுள்ளன.
பல நடவடிக்கைகள் சர்வதேச சுகாதார சட்டத்துக்கு அமைவானதாகவும் அவசியத்திற்கும் அப்பால் சென்று நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இதன் மூலம் மக்களின் வாழ்க்கை மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக மட்டுமல்லாது உலக பொது சுகாதார பாதுகாப்பு தொடர்பாக சீன அரசாங்கம் உயர் மட்டப் பொறுப்பை காட்டியுள்ளது.

போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை அவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்த்துள்ளனர். இலங்கையில் அனைத்து தரப்பிலும் வதந்திகளை பரப்புவதில்லை. வதந்திகளையோ பீதிகளையோ நம்புவதில்லை. அதேபோல் கொரோனோ தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை உதவும் என எதிர்பார்ப்பதாக” சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பகிரப்படும் வீடியோ .... கொரோனா வைரஸ் தொற்றியவரை சுட்டுக் கொலை செய்கிறதா சீனா? (இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை) பகிரப்படும்  வீடியோ .... கொரோனா வைரஸ் தொற்றியவரை சுட்டுக்  கொலை செய்கிறதா சீனா? (இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை) Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5