கொரோனாவின் வைரஸின் தாக்குதலால் சீனாவில் பொருளாதார - வர்த்தகம் வீழ்ச்சி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனாவின் வைரஸின் தாக்குதலால் சீனாவில் பொருளாதார - வர்த்தகம் வீழ்ச்சி.


 - ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் -
கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியால் சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதை
அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையுமென்றும் கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாக சர்வதேச எரிசக்தி முகமை(  International Energy Agency) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் கச்சா எண்ணெய்யின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பெரலாக குறையுமென்றும், கடந்த மாதம் கணிக்கப்பட்டதிலிருந்து இது 30%  குறைவு என்றும் கூறியுள்ளது.

இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. Brent  கச்சா எண்ணெயின் விலை 1.3% குறைந்து, பெரலுக்கு $55.08 ( சுமார் 10 ஆயிரம் ரூபா )  உள்ளது.

கொரானா வைரஸின் தாக்கத்தால் சர்வதேச கச்சா எண்ணெயின் தேவை தினசரி  2 லட்சத்தி 30 ஆயிரம் பெரலாக குறையும் என்று எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான OPEC ஏற்கனவே தெரிவித்திருந்தது.

கொரோனாவின் வைரஸின் தாக்குதலால் சீனாவில் பொருளாதார - வர்த்தகம் வீழ்ச்சி. கொரோனாவின் வைரஸின் தாக்குதலால் சீனாவில் பொருளாதார - வர்த்தகம் வீழ்ச்சி. Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5