இங்கிலாந்தில் 5 பாடசாலை­களில் வைரஸ் தொற்று எச்­ச­ரிக்கை ..


பிரித்­தா­னி­யாவில் பிறைட்டன் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த சாரணர் தலைவர் ஒரு­வ­ருக்கு  கொரோனா வைரஸ்
தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­யடுத்து  5 பாடசாலை­களில் வைரஸ் தொற்று எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்தப் பாட­சா­லையின் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் தம்மைத் தாமே தனி­மைப்­ப­டுத்த வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளா­கி­யுள்­ள னர். சாரணர் தலை­வ­ரான ஸ்டீ பன் வெல்ஷ் (53 வயது) சிங்­கப்­பூ­ருக்கு வர்த்­தக சுற்­று­லா­வொன்­றுக்கு சென்றவேளை வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து பிரான்ஸ் சென்ற அவர் அங்­கி­ருந்த தனது நண்­பர்­க­ளுக்கு வைரஸ் தொற்று ஏற்­படக் கார­ண­மாக இருந்­துள்ளார்.


தொடர்ந்து பிறைட்டன் நக­ருக்கு திரும்­பிய அவர்­, அங்­குள்ள பல­ருக்கு வைரஸ் தொற்றை பரப்­பி­யி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

பிரித்­தா­னியா மற்றும் ஐரோப்­பாவில்  மேற்­படி வைரஸ் பர­வு­வது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து தானே அந்த வைரஸ் தொற்­றுக்கு காரணம் என்­பதை ஸ்டீவன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

விற்­பனை அதி­கா­ரி­யான அவர் பிரித்­தா­னிய மருத்­து­வ­ம­னையின் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட அறை­யி­லி­ருந்து உரையாற்­று­கையில், தான் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் இந்நிலையில் தன்னால் ஏனையவர் களுக்கு வைரஸ் தொற்று  ஏற்பட்டுள்ளதை உணர்ந்ததாகவும்  கூறினார்.
இங்கிலாந்தில் 5 பாடசாலை­களில் வைரஸ் தொற்று எச்­ச­ரிக்கை .. இங்கிலாந்தில் 5 பாடசாலை­களில் வைரஸ் தொற்று எச்­ச­ரிக்கை .. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.