பலஸ்தீனை இரண்டாக பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை எதிர்த்து இலங்கையில் உள்ள பல நாடுகளின் தூதுவர்கள் கையெழுத்து. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பலஸ்தீனை இரண்டாக பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை எதிர்த்து இலங்கையில் உள்ள பல நாடுகளின் தூதுவர்கள் கையெழுத்து.


(அஸ்ரப் ஏ சமத்)
ஜக்கிய அமேரிக்காவின்  ஜனாதிபதி டரம்ப்  பலஸ்தீன் நாட்டினை இரண்டாக பிரித்து இஸ்ரேலுக்கு
சாா்பாக  இரண்டு நாடுகள் எனும்  திட்டத்தினை  அறிமுகப்படுத்தியிருந்தாா்.


அதனை எதிா்த்து பலஸ்தீன் நாட்டின் ஜனாதிபதி மொகமட் அப்பாஸ் கடந்த 11.02.2020 ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்  கூட்டத்தில் உரையாற்றினாா்.

அவ் உரையை கொழும்பில் உள்ள  பலஸ்தீன் துாதுவா் ஆலயத்தில் நேரடி  ஒளி,ஒலிபரபபினையும்  கேட்குமாறும்  பலஸ்தீன துாதுவா் சுகைா் எம்.எச். டாா் செய்யத் சக வெளிநாட்டுத் துாதுவா்கள், மதத் தலைவா்கள், ஊடகவியலாளா் பலஸ்தீன் நட்புரவு சங்க உறுப்பிணா்களை அழைத்திருந்தாா்  .

அங்கு சவுதி அரேபியா, ஜக்கிய நாடுகள் கொழும்புப் பிரநிதி, ஏனைய நாடுகளின் துாதுவா்களும் கலந்து கொண்டனா் அத்துடன் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அங்கு வைக்கப்பட்டிருந்த சுலோகத்திலும்  பலஸ்தீனத்திற்கு ஆதரவாக  கையெழுத்திட்டனா்.பலஸ்தீனை இரண்டாக பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை எதிர்த்து இலங்கையில் உள்ள பல நாடுகளின் தூதுவர்கள் கையெழுத்து.  பலஸ்தீனை இரண்டாக பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை எதிர்த்து இலங்கையில் உள்ள பல நாடுகளின்  தூதுவர்கள் கையெழுத்து. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5