3 நீதிபதிகளுடன் 63 தடவை ரஞ்சன் பேச்சு.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள
மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதவான் தம்மிக்க ஹேமபால ஆகியோருடன் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த காலத்தில் 63 தடவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டுள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நுகேகொட மேலதிக நீதவான் ஹாரிஸ் பெல்பொலவிடம் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கு 33 தடவையும், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு 10 தடவையும், நீதவான் தம்மிக்க ஹேமபாலவுக்கு 20 தடவையும் முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதிபதி பத்மினி ரணவக்க 10 தடவையும், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய 6 தடவையும், நீதவான் தம்மிக்க ஹேமபால 10 தடவையும் ரஞ்சன் ராமநாயக்கவுக்குத் தொலைபேசி அழைப்பை  ஏற்படுத்தியுள்ளார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின்  செயற்பாடுகளுக்கு அநாவசியமாகத் தலையீடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
3 நீதிபதிகளுடன் 63 தடவை ரஞ்சன் பேச்சு. 3 நீதிபதிகளுடன் 63 தடவை ரஞ்சன் பேச்சு. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.