தெற்கிலிருந்து தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.


2018/2019 கல்வியாண்டிற்கு தென் மாகாணத்திலிருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2020.02.09) மாத்தறை இல்மா கல்லூரி பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென் மாகாண முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம அதிதியாக மாத்தறை நூரணியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ் ஷெய்க் Arkam Nooramith அவர்கள் கலந்து அறிவும் பண்பாடும் இணைந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்குவதன் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் பிரதம வளவாலராக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை பீட புவியியற் துறை விரிவுரையாளர் Mrs. S. Rafeeka மற்றும் இல்மா கல்லூரியின்யின் ஆசிரியை Mrs.M.Y.N. Mazeedha அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக தென் மாகாண கல்வியமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் FEED நிறுவனத்தின் தலைவருமான M.k M. Rasmy அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தென் மாகாணத்தில் முதற் தடவையாக இடம்பெற்ற இந் நிகழ்வில் கிட்டத்தட்ட 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்கிலிருந்து தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. தெற்கிலிருந்து தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.