சவூதி - ஜித்தா விமான நிலையத்தில் 20 வருடமாக விமான கட்டுப்பாட்டாளராக கடமையாற்றும் மாவனல்லை ரிழ்வான் ஹனீபா கெளரவிப்பு.


-இக்பால் அலி -
இலங்கை மாவனல்லையைச் சேர்ந்தவரும், சவுதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் விமான
கட்டுப்பாட்டாளருமாக பணிபுரியும் ரிழ்வான் ஹனீபா அவர்களின் 20 வருட காலமாக செய்து வருகின்றார், அவரது சேவை நலனைப் பாராட்டி சவுதி அரேபியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுவர்  அஸ்மி தாசிம் அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்.


ரிழ்வான் ஹினிபா 2001 முதல் இன்றுவரையிலும்  சவுதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் விமான கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்து வருகிறார். எனினும்   சமூக நலப் பணிகளிலும் ஹஜ் காலங்களிலும் இலங்கை மக்களுக்கு பேருதவியாக இருந்து செயற்பட்டு வருகிறார்.   


குறிப்பாக இலங்கையிலிருந்து ஜித்தா விமான நிலையம் ஊடாக வந்து  செல்கின்ற இலங்கை பிரயாணிகள், ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வரும் யாத்திரிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கண்டறிந்து தன்னால் முடியுமான உதவிகளை செய்து இலங்கை நாட்டு மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவர்
இவரது சேவையை பல ஹஜ் உம்ரா முகவர்கள், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பாராட்டியுள்ளார்கள்.


ரிழ்வான் ஹனிபா மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது இந்த மகத்தான சேவை மேலும் தொடர வேண்டுமென இலங்கை வாழ் மக்கள் வாழ்த்துகின்றனர்

இக்பால் அலி
03-02-2020
சவூதி - ஜித்தா விமான நிலையத்தில் 20 வருடமாக விமான கட்டுப்பாட்டாளராக கடமையாற்றும் மாவனல்லை ரிழ்வான் ஹனீபா கெளரவிப்பு. சவூதி - ஜித்தா விமான நிலையத்தில் 20 வருடமாக விமான கட்டுப்பாட்டாளராக கடமையாற்றும் மாவனல்லை ரிழ்வான் ஹனீபா கெளரவிப்பு. Reviewed by Madawala News on February 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.