உணவு மூலம் கொரோனா வைரஸ் பரவாது... இலங்கையர்களுக்கு சுகாதார சேவை இயக்குனர் அறிவிப்பு.


கொரோனா வைரஸ் எந்தவொரு உணவின் ஊடாகவும் பரவாதென பதில் சுகாதார சேவை
இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று தொடர்பில் நாளாந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு உணவிலும் கொரோனா நோய் பரவாது. வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரின் இருமல் தும்மல் ஊடாகவே மற்றொருவருக்கு பரவுகின்றது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றினால பாதிக்கப்பட்டவர் ஒருவரின் அருகில் இருப்பதன் மூலமே மற்றுறொருவர் மீது இந்த தொற்று பரவுகின்றது.

இதன் காரணமாக எந்தவொரு உணவு ஊடாகவும் இந்த நோய் தொற்று பரவாது. எனவே இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உணவு மூலம் கொரோனா வைரஸ் பரவாது... இலங்கையர்களுக்கு சுகாதார சேவை இயக்குனர் அறிவிப்பு. உணவு மூலம் கொரோனா  வைரஸ் பரவாது... இலங்கையர்களுக்கு சுகாதார சேவை இயக்குனர் அறிவிப்பு. Reviewed by Madawala News on February 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.