மாவனல்லை JM Media ஊடக நிறுவனம் நடத்திய ஊடக செயலமர்வும் சான்றிதழ் வழங்கள் நிகழ்வும்.


மாவனல்லை  (JM Media Production & College) ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் மற்றும் ஜே.எம் மீடியா
ஊடகக் கல்லூரி இணைந்து ஐந்தாவது முறையாகவும் இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு  ஞாயிற்றுக்கிழமை (05) மாவனல்லை கனேதன்னை புளுபில்ட் டீ மென்சன்  (Blue Field Tea Mansion) மண்டபத்தில் ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ராஷித் மல்ஹர்தீன் தலைமையில்  இடம் பெற்றது.


இச் செயலமர்வில் அறிவிப்பு துறை குறித்த விரிவுரையாளராக நிகழ்ச்சி தொகுப்பாளர் வசந்தம் தொலைகாட்சியின் செய்தி வாசிப்பாளருமான  சம்பவி குமாரலிங்கம், ஜே.எம் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் வலையமைப்பு பொறியியளாருமான ரஸா மல்ஹர்தீன் அவர்களும் நாடரிந்த பேச்சாளர் வளவாளர் பாஸீர் முகைடீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரியில் ஊடக கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், சர்வதேச ரீதியில்  சாதித்த மாணவர்களுக்கு JM Awards 2020 வழங்கி வைக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் JM Awards தொடர்ந்தும் நடைபெறுமென ஜே.எம் ஊடக  நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ராஷித் மல்ஹர்தீன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் ஊடகர்கள், மாணவர்கள், ஊடக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் கலந்து கொண்டதுடன் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

இச் செயலமர்வில் 300 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாவனல்லை JM Media ஊடக நிறுவனம் நடத்திய ஊடக செயலமர்வும் சான்றிதழ் வழங்கள் நிகழ்வும். மாவனல்லை JM Media ஊடக நிறுவனம் நடத்திய ஊடக செயலமர்வும் சான்றிதழ் வழங்கள் நிகழ்வும். Reviewed by Madawala News on January 08, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.