முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ, இடமளிக்க வேண்டாம்.


பிரபல  தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.எம்.பாரிஸ்  எதிர்வருகின்ற பாராளுமன்ற
பொது தேர்தலில்  கண்டி மாவட்டத்தில்   பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட கிடைத்துள்ளமை குறித்து, நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரகடசியின்  கண்டி மாவட்ட தலைவரும் வடமத்தியமாகாண முன்னாள் ஆளுநருமான சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக நேற்று முந்தினம் அக்குரணையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடளுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் முன்னால் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஹாஜியார் என்பவர், ஜனாதிபதிக்கும் மற்றும் அதனை சார்ந்துள்ள அரசியல் உயர்பீடத்த்திற்கும் மிகவும் சமீபமாகவுள்ளவர்  மட்டுமல்லாது, ஒரு    நேர்மை  உள்ளிட்ட சிறந்த ஆளுமை கொண்டவருமாவார். மேலும் இவருக்கு உயர்பீடத்தில் இருக்கும் பலத்த செல்வாக்குகள் காரணமாக  சமுதாயத்த்திற்கு பல சேவைகள் செய்யக்கூடிய சந்தர்ப்பம் தற்பொழுது முஸ்லீம் சமுகாயத்திற்கு  தபொழுது கிடைத்துள்ளதுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்துள்ள அதிஷ்டமாகும். இவ்வாறு இருந்த போதிலும், அனைத்தையும் விட முஸ்லிம்களையும் சிங்கள மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவே இவரை நான் காண்கிறேன். ஆகவே இவர் மூலம் முஸ்லீம் சமுதாயத்திற்கு,  கிடைக்கவிருக்கும் நல்ல பல நற்கருமங்களை
முஸ்லீம் சமூகம் இழந்துவிடக்கூடாது.எனவும் குறிப்பிட்டார்.

அதாவது இதுவரை உத்தியோக பூர்வமாக பாராளுன்ற தேர்தலுக்கான பெயர் விபரம்  வெளிவராத  நிலையில் ,ஜனாதிபதி பிரதமர் உள்ளிடட முக்கியஸ்தர்களினால்  கண்டி மாவடட வேட்ப்பாளராக களமிறக்கப்பட்டு,, தமது தேர்தல் பணிகளை முன்டெடுக்கும்படியும் அதற்கான  ஆசிர்வாதத்தினையும்  உயர்மட்டம் வழங்கி யுள்ளமை  சமூகத்திற்கு  கிடைத்துள்ள  கண்ணியம் மட்டுமல்ல, இதனால்  சமூதயத்திற்கு சேவை செய்யக்கூடிய   பெரும் அங்கீரமாகவே நான்  இதனை கருதுகிறேன். ஆகவே ஜனாதிபதி மூலம் இவ்வாரான அதிஷ்டகரமான விடயங்கள் இடம்பெறுகின்ற போது. நாம் வேரென்னதான் கூற வேண்டியுள்ளது.  எனவும்   முன்னால் ஆளுநர் கேள்வியெழுப்பினார்.

ஆகவே . முழு முஸ்லிம்களும் ஒன்றிணைந்தாவது இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்பதற்கான காலோசிதமான  திட்டமொன்றை தங்களுக்குள்  வகுத்துக்கொள்ள வேண்டியமை காலத்தின் கட்டாயத்  தேவையாகும். எனவும்  தமது நீண்ட உரையில் குறிப்பிட்டிருந்தார்..

இங்கு,எதிர்வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலில்  கண்டி மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் ஏ.எல்.எம்.பாரிஸ்,   பிரதேச சபை உறுப்பினர்களான எம் ஹஜ், எம்அஸ்வர், எப்.நிஸ்ரினா  வஸீர் முக்தார், எம். மசீனம் முன்னாள் அக்குறணை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீ.சு க.வினது,  நீண்டகால உறுப்பினருரமான வஹாப் ,  முன்னாள் மாகாண சபை வேட்பாளர் ஐனுதின்  ஆகியோர்களும்  அங்கு உரையாற்றினர். 
.(சாரிக்  அமீன் )
முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ, இடமளிக்க வேண்டாம். முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ,  இடமளிக்க வேண்டாம். Reviewed by Madawala News on January 08, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.