ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு.


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இனால் நேற்று (13.01.2020) இரத்ததான நிகழ்வு
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 பல்கலைக்கழகத்தின் சோரத கட்டடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்களான யு. ரொஷான் அஜ்வாத் மற்றும் முபீதா இர்ஷாத் மற்றும் சிறப்பு அதிதியாக சென்ற ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கொஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்ட வீராங்கனை பாதும் சலீஹா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இன மத பேதமின்றி அனைத்து இன பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், முஸ்லிம் எய்ட் உறுப்பினர்கள், ஏனைய பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இனால் வருடா வருடம் இவ்வாறான இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் இம்முறை முஸ்லிம் எய்ட் நிறுவனத்துடன் இணைந்து இவ் இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

 இத்தேசத்தில் 15 வருட காலம் சேவையாற்றி வரும் முஸ்லிம் எயிட் நிறுவனம் தனது 15 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு நிகழ்வினை இணைந்து நடாத்தியதுடன் இந்நிகழ்வுக்கான அனுசரணையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஊடக பிரிவு
முஸ்லிம் மஜ்லிஸ்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5