பொதுஜன பெரமுன அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் - கடற்தொழிலாளர்கள் சந்திப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொதுஜன பெரமுன அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் - கடற்தொழிலாளர்கள் சந்திப்பு.


(எம்.பஹ்த் ஜுனைட்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்தொழில் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


இதற்கமைய மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்கள் மாவட்ட மீனவர்கள் சார்பாக தாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கண்டறிய முன்னாள் நகர சபை உறுப்பினரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.சியாட்டை இன்று மாலை தங்குமிடத்திற்கு அழைத்து தமது பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறினர்.

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பூநொச்சிமுனைமீனவர் சங்கத்தின் தலைவர் யூ.எச்.முகைதீன் பாவா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மீனவர்கள் தாம் மீன்பிடி நடவடிக்கையின்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினர்.இதனையடுத்து அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் இதுதொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகொண்டு மீனவர்களுக்கு அவசரமாக பெற்றுக்கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய தீர்வுத்திட்டங்கள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன் மேற்கொண்டு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பிலும் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.இச்சந்திப்பில் மாவட்டத்தினைச்சேர்ந்த அதிகமான மீனவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.பொதுஜன பெரமுன அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் - கடற்தொழிலாளர்கள் சந்திப்பு. பொதுஜன பெரமுன அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் - கடற்தொழிலாளர்கள் சந்திப்பு. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5