கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுடன் கடமை செய்ய வேண்டி உள்ளதால் எமக்கு பிரதி லாபங்களை வழங்கவும்.


பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (27)
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

நோய் தொடர்பில் மற்றும் நோய் பரவும் விதம் தொடர்பில் தெளிவுப்படுத்திய அவர்கள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்குவதற்கு  6 யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே:

புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் குழுவுடன் செயற்படும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைப் பிரிவினரின் அர்ப்பணிப்பினை மதித்து அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு பிரதிலாபங்களை வழங்குவதற்கான சூழல் தொடர்பில் ஆராயுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார பிரதிலாபமாகவோ அல்லது வேறு விதமான பிரதிலாபமாகவோ இருக்கலாம் எனவே குறித்த சங்கத்தின் செயலாளர், வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

‘சீனாவில் புதுவருடத்தை கொண்டாடுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற சீனத் தொழிலாளர்கள் இலங்கைக்குத் திரும்ப உள்ளனர். ஆனால் நாம் அவர்களை இங்கு கொண்டு வருவதற்கு முன்னர் முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதை மூன்று வெப்ப ஸ்கேன் இயந்திரங்களுக்கு ஒப்படைத்து விட்டு எங்களால் காத்திருக்க முடியாது. விமான நிலையத்தில் தற்போதுள்ள வசதிகளை தீவிரமாக கண்காணித்தல் மற்றும் மேம்படுத்துதல் வேண்டும்.

அடுத்த காரணி என்னவென்றால், நோயாளர்கள் இவ்வாறு வருகைத்தர ஆரம்பித்தால் தற்போது இது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் எழுந்துள்ளன எனவே இதனை தடுப்பதற்கு குறைந்தப்பட்ச வசதிகளையாவது செய்து தருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுடன் கடமை செய்ய வேண்டி உள்ளதால் எமக்கு பிரதி லாபங்களை வழங்கவும். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுடன் கடமை செய்ய வேண்டி உள்ளதால் எமக்கு பிரதி லாபங்களை வழங்கவும். Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.