கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்து சீனா சோதனை ...


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எய்ட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்து சீனா
சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
https://www.reuters.com/article/us-china-health-abbvie-hiv/china-testing-hiv-drug-as-treatment-for-new-coronavirus-abbvie-says-idUSKBN1ZP0QK

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர்  எண்ணிக்கை 106  ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்தால் இதுவரை சுமார் 3000   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாங்காங், மெக்சிகோ மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் சீன பெண் ஒருவருக்கு நோய்த் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா நிறுத்தபட்டுள்ளது.

இந்த நிலையில், எச்.ஐ.வி நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்துவது குறித்து சீன அரசு சோதனை செய்து வருவதாக ஏபிவீ (AbbVie) என்ற மருந்து நிறுவனம் கூறியுள்ளது.


சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, லொபினவிர் (lopinavir) மற்றும் ரிடோனவிர் (ritonavir-)  இந்த இரண்டு மருத்துகளின்  கூட்டுக் கலவை மருந்து அலுவியா,  எச்.ஐ.விக்கு பயன்படுத்தப்படும் நிலையில், இதனை கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மாத்திரைகள் அளித்து வருவதாகவும் சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு சில நாட்களில் வைரஸின் வீரியம் குறையும் பட்சத்தில் அடுத்தகட்ட சோதனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்து சீனா சோதனை ... கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு  எய்ட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்து சீனா சோதனை ... Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.