தாயால் குழி தோண்டி புதைக்கபட்டு காப்பற்றப்பட்ட குழந்தையை தத்தெடுக்க 500 பேர் விண்ணப்பம்.


தாய் ஒருவர்  தான் பெற்ற குழந்தையை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று
இரத்தினபுரி கொஸ்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யுவதியின் உறவினர்கள் அயலவர்களுக்கு வழங்கிய தகவலையடுத்து அயலவர்களால் குழந்தையை மீட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர். தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார் குழந்தையை கடந்த 08 ஆம் திகதி உயிருடன் மீட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 07ஆம் திகதி இரவு சந்தேகநபரான 18 வயதான நிசாந்தி மதுசிகா பண்டார எனும் குறித்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதோடு, குழந்தை பிறக்கபோவது குறித்து எவ்வித கணக்கெடுக்காத காரணத்தால் மறுநாள் 08ஆம் திகதி காலை 9.00 மணியளவில் வீட்டில் வைத்து குழந்தை பிற்ந்தபோது தொப்புள் கொடியை வீட்டில் இருந்த கத்தியால் வெட்டி தமது வீட்டின் அருகில் ஒன்றரை அடி குழி தோன்றி புதைக்கப்பட்டதை கண்ட யுவதியின் உறவினர் ஒருவர் அயலவர்களுக்கு வழங்கிய தகவலையடுத்து அயலவர்கள் அவ்விடத்திற்குச் சென்று குழியை தோண்டி குழந்தையை மீட்டுள்ளனர்,

இரத்தினபுரி, காங்கம, கொஸ்கல தோட்டத்தின் லயன் காம்பிராவின் அருகில் குழி தோண்டி புதைக்கப்பட்ட குறித்த குழந்தை, குழியிலிருந்து மீட்கப்பட்டு இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலை குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இக்குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புபவர்களை விண்ணப்பிக்குமாறு இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி விடுத்த வேண்டுகோளுக்கமைய, குழந்தையை தத்தெடுத்து வளர்க்க 500 இற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் நீதிமன்ற மற்றும் சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை அதிகார சபையின் சட்ட திட்டங்களுக்கிணங்க சட்ட ரீதியாக பொருத்தமானவர்களுக்கு குழந்தை வளர்ப்புக்கு அனுமதி வழங்க முடியும் எனவும் இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
தாயால் குழி தோண்டி புதைக்கபட்டு காப்பற்றப்பட்ட குழந்தையை தத்தெடுக்க 500 பேர் விண்ணப்பம். தாயால் குழி தோண்டி புதைக்கபட்டு காப்பற்றப்பட்ட குழந்தையை தத்தெடுக்க 500 பேர் விண்ணப்பம். Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.