இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ கட்சித் தலைவர் ஆகவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் முடிவு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ கட்சித் தலைவர் ஆகவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் முடிவு.


இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தலைமைத்துவம்
தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றால் அதற்கு தாம் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவதுவல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் செயற்படுவதற்கு இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மாலை 5 மணியளவில் சிறிகொத்தவுக்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றமொன்றையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக சஜித் பிரேமதாஸவுக்கு கட்சியின் தலைமை பொறுப்பை வழங்க வேண்டுமென பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் தெளிவான தீர்வு ஒன்று கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜே.சீ.அலவதுவல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ கட்சித் தலைவர் ஆகவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் முடிவு. இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ கட்சித் தலைவர் ஆகவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் முடிவு. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5