2005 முதல் ஆராய்ச்சி மேற்கொண்டு சுவையுடன் தனித்துவமான நறுமணம் கொண்ட புதிய மாம்பழ இனம் அறிமுகம்!


புதிய வகை மா இனம் ஒன்று ஆராய்ச்­சியின் பின்னர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கிளி­நொச்சி.
பிராந்­திய விவ­சாய ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி நிலையம், மேல­தி­கப்­ப­ணிப்­பாளர் (ஆராய்ச்சி) கலா­நிதி.சி.ஜே.அர­ச­கே­சரி, தெரி­வித்­துள்ளார்.

பல்­லாண்டு தாவ­ரங்­களை இனங்­கண்டு அவ்­வாறு இனங்­கா­ணப்­பட்ட தாய்த்­தா­வ­ரங்­களை நாற்­றுக்கள் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது. இதற்­காக மாகாண விவ­சா­யத்­தி­ணைக்­க­ளத்­தி­ன­ருடன் இணைந்து திரு­நெல்­வேலி விவ­சாய ஆராய்ச்சி நிலை­யத்­தினர் மாவட்ட செய­ல­கத்தின் நிதி­யு­த­வி­யுடன் 2005,2006 ஆம் ஆண்­டு­களில் ஆய்­வொன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர்.


இந்த ஆய்வில் பல­த­ரப்­பட்ட மாங்­கன்­று­களும், பலாக்­கன்­று­களும் தாவர ரீதியில் ஆரா­யப்­பட்டு சிறப்­பான கன்­றுகள் தெரிந்­தெ­டுக்­கப்­பட்­டது. கறுத்­தக்­கொ­ழும்பான் மா இனத்தில், பழத்தில் உள்ள நார்­பற்று, தோலின் நிறம், பழத்தின் இனிப்­புச்­சுவை, வாசம் போன்­றன கருத்தில் கொள்­ளப்­பட்டு மூன்று தாய்த்­தா­வ­ரங்கள் தெரிந்­தெ­டுக்­கப்­பட்­டன. அவ்­வாறே விலாட் இனத்தில் இரண்டு இனங்கள் தெரிந்­தெ­டுக்­கப்­பட்­டன.

ஆய்­வுக்கு உட்­பட்­ட­போது எதேச்­சை­யாக புதி­ய­தொரு குணாம்­சங்­க­ளுடன் ஒரே வகை­யான இரண்டு தாய்­தா­வ­ரங்கள் கண்­ட­றி­யப்­பட்­டன. அவற்றை ஆராய்ந்த­ போது இப்­ப­ழங்கள் தனித்­தன்மை வாய்ந்­த­தாக இருந்­தன. இப்­ப­ழமும் மரமும் மேலும் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யதன் விளை­வாக ஏனைய பழ­ம­ரங்­களின் குணாம்­சங்­க­ளை­விட பல­வ­கையில் வேறு­பட்­ட­தாக காணப்­பட்­டது.

பழங்­களின் வடிவம், பருமன், சதைப்­பற்று, நார்­பற்று, சுவை மற்றும் தனித்­து­வ­மான நறு­மணம் என்­பன துல்­லி­ய­மான வேறு­பா­டு­க­ளை­காட்டி நின்­றன. இந்த ஆராய்ச்­சியின் விளை­வாக இத்­தாய்த்­தா­வ­ரத்­தி­லி­ருந்து ஒட்­டுக்­கி­ளைகள் கொண்­டு­வ­ரப்­பட்டு கன்­றுகள் உரு­வாக்­கப்­பட்­டன. விவ­சாய ஆராய்ச்சி நிலை­யத்­திலும், மாவட்ட விவ­சாயப் பண்­ணை­யிலும் கன்­றுகள் நாட்­டப்­பட்­டன.

அந்தக் கன்­றுகள் வளர்ந்து தற்­போது காய்த்துக் குலுங்­கு­கின்­றன. இம்­ம­ரத்தின் கிளைகள் கீழ்­நோக்கி வளர்ந்­தி­ருப்­ப­தனால் படரும் செடி­யைப்போல் காட்­சி­ய­ளிக்­கின்­றன. மேலும் இந்த ஆராய்ச்­சியின் விளை­வாக இந்த இனம் வருடம் முழு­வதும் காய்க்கும் தன்மை கொண்­ட­தா­கவும் போது­மா­ன­­ளவு குறிப்­பி­டக்­கூ­டி­ய­ளவு பழச் சாற்றைக் கொண்­ட­துடன் விசே­டித்த நறு­ம­ண­முள்ள சதைப்­பற்­றுடன் சாதா­ரண பரு­மனைக் கொண்­ட ­ப­ழ­மாக அறி­யப்­பட்­டது.



ஒவ்­வொரு பழமும் சரா­ச­ரி­யாக 280 தொடக்கம் 450 கிராம் நிறை வரை இருந்­துள்­ளது. பழுக்கும் போது பழம் முழு­வதும் மஞ்சள் நிற­மா­வ­துடன் பார்­வைக்கு மிகவும் அழ­கா­ன­தா­கவும் தென்­படும். நன்­றாகப் பழுத்த மாம்­ப­ழங்­களை 3-5 நாட்கள் வரை பழு­த­டை­யா­மலும் பாது­காக்­கலாம். மேலும் இம்­மாங்­கன்­றுகள் வீட்­டுத்­தோட்ட வளர்ப்­பிலும் வறள்­நில பிர­தே­சங்­க­ளிலும் நல்­ல­ப­ய­னைத்­தரும் என நிரூப­ண­மா­கி­யுள்­ளது.

கடந்த 09.01.2020 அன்று விவ­சா­யத்­தி­ணைக்­க­ளத்தின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற இன வெளி­யீட்­டு­கு­ழுவின் வரு­டாந்த கூட்­டத்தில் திணைக்­கள அதி­கா­ரிகள், உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பல்­க­லை­க­ழக பேரா­சி­ரி­யர்கள் முன்­னி­லையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அவர்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து இப்­பு­திய மா இனம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆராய்ச்­சியில் வெற்­றி­கண்ட கலா­நிதி.சி.ஜே.அர­ச­கே­சரி, மேல­தி­கப்­ப­ணிப்­பாளர் (ஆராய்ச்சி) இப்­பு­திய மா இனத்தை திரு­நெல்­வேலி மஞ்சள் என்று அழைக்­கலாம் என பரிந்­து­ரைத்­துள்ளார். ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட திரு­நெல்­வேலி வெள்ளை (பாகல்), திரு­நெல்­வேலி நீலம் (புடோல்), திரு­நெல்­வேலி நாவல் (கத்­தரி), திரு­நெல்­வேலி சிவப்பு (சின்­ன­வெங்­காயம்), போன்ற வரி­சையில் இம் மா இனமும் திரு­நெல்­வேலி மா – 01 என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

இம் மா இனத்தை உரு­வாக்க உத­விய அனைத்து தரப்­பி­ன­ருக்கும் மாகா­ண­சபை விவ­சாய உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கும் ஏனைய விஞ்­ஞா­னி­க­ளுக்கும் இக்­க­ருத்­திட்­டத்­திற்கு நிதி­யு­தவி வழங்­கிய அப்­போ­தைய அர­சாங்க அதிபர் மதிப்­பிற்­கு­ரிய திரு.கணேஸுக்கும் கலா­நிதி சி.ஜே.அர­ச­கே­சரி, மேல­தி­கப்­ப­ணிப்­பாளர் (ஆராய்ச்சி) நன்­றி­களை தெரி­வித்­துக்­கொண்டார்.

இப்­பு­திய மா இனத்தில் கன்­றுகள் இப்­போது உரு­வாக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தனால் விரைவில் இந்த இனத்தின் கன்­றுகள் விவ­சா­யி­க­ளுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
metro

2005 முதல் ஆராய்ச்சி மேற்கொண்டு சுவையுடன் தனித்துவமான நறுமணம் கொண்ட புதிய மாம்பழ இனம் அறிமுகம்! 2005 முதல் ஆராய்ச்சி மேற்கொண்டு சுவையுடன் தனித்துவமான நறுமணம் கொண்ட புதிய மாம்பழ  இனம் அறிமுகம்! Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.