இலங்கையில் 12 மருத்துவமனைகள் தயார் நிலையில்.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அனைத்து
மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 12 வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஐடிஎச் எனப்படும் தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, நீர்கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, பதுளை,அநுராதபுரம், யாழ்ப்பாணம், கண்டி, களுபோவில, கராப்பிட்டிய உள்ளிட்ட 12 அரச வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடடிவக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய கையேடுகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சிடம், கல்வி அமைச்சின் கீழுள்ள பாடசாலைகள் கோரியுள்ளன.
இலங்கையில் 12 மருத்துவமனைகள் தயார் நிலையில். இலங்கையில் 12 மருத்துவமனைகள் தயார் நிலையில். Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.