“எமக்கு எதிராக வாக்களித்தவர்கள், இன்று ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் தெளிவாக உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் பலர் எம்முடன் இணைவர்.


“சின்னம் என்ன என்பதுத் தொடர்பில் பிரச்சினை இல்லை. கூட்டணியாக களமிறங்கி, அடுத்த பொதுத்
தேர்தலில் பலமிக்க அரசாங்கத்தை அமைக்கவுள்ளோம்” என்று, போக்குவரத்து சேவை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்காக சகல கட்சிகளும் எவ்விதக் கட்சி பேதமுமின்றி ஒத்துழைப்பை வழங்கியதைப் போன்றே, பொதுத் தேர்தலிலும் கூட்டணியாக செயற்படுவரென அவர் தெரிவித்தார்.

கண்டியில் வைத்து நேற்று(03) கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், கூட்டணியின் சின்னம், “மொட்டா” அல்லது “வேறா” என்பதுத் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தவர்கள் என்ற ரீதியில், தாம் மொட்டு சின்னத்தையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

“மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதே, கூட்டணி கட்சிகள் அனைத்தினதும் நோக்கம். சின்னத்தில் பாரிய பிரச்சினை இல்லை என்றாலும் மொட்டை உருவாக்கியவர்களான எமது விருப்பம் மொட்டு சின்னமே” என்றார்.

“எமக்கு எதிராக வாக்களித்தவர்கள், இன்று ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் தெளிவாக உள்ளனர். எனவே அவரது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க இன்று அதிகமானோர்
உள்ளனர். எதிர்காலத்திலும் பலர் ஒத்துழைப்பு வழங்குவர்” என்றார்.

“ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது காணப்படும் நெருக்கடியானது ரணில் விக்கிரமசிங்க கட்சிக்குள் வந்ததிலிருந்து காணப்படுகின்றது. அவர் அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தை வகிக்கும் வரை இந்த நெருக்கடி காணப்படும். அவர் கட்சியிலிருந்து விலகினாலும் இந்த நெருக்கடி நிலை அதிகரிக்கும்” என்றார்.
“எமக்கு எதிராக வாக்களித்தவர்கள், இன்று ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் தெளிவாக உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் பலர் எம்முடன் இணைவர். “எமக்கு எதிராக வாக்களித்தவர்கள், இன்று ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் தெளிவாக உள்ளனர். அதனால்  எதிர்காலத்தில் பலர் எம்முடன் இணைவர். Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.