ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28 ஆகிய திகதிகளில் ஒன்றில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு.


எதிர்வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றை கலைக்கப் பட்டால்,  ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது
28  ஆகிய திகதிகளில் ஒன்றில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பொதுத் தேர்தல் நடத்துவது குறித்தோ நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்தோ இதுவரையில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றைக் கலைத்தால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28 ஆகிய திகதிகளில் ஒன்றில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு. ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28  ஆகிய திகதிகளில் ஒன்றில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு. Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5